இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலெனும் நிகழ்த்துக் கலை - சிட்னி யாக்கோ

படம்
காதலெனும் நிகழ்த்துக் கலை ஜெர்மனி நாட்டை சார்ந்த உலே (Uley) என்கிற நிகழ்த்துக் கலைஞர் தனது 76 ஆவது வயதில் இறந்த செய்தியை கேட்டவுடன் ஏதோ ஒரு விதத்தில் அவருடைய முன்னாள் காதலி மரீனா அப்ரமோவிக் (Marina abramovic) உடன் இணைந்து  அவர் செய்த செயல்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அவர்கள் இருவரும் 1988 ஆம் ஆண்டு பிரிந்தனர். ஆனால் அவர்கள் சேர்ந்து இருந்த காலங்களில் நவீன கலை வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சில தருணங்களை நிகழ்த்தி உள்ளனர். அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் என்னையும் உட்பட இன்னும் பல்லாயிரம் மனங்களில் எஞ்சி வாழ்ந்து கொண்டு இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு என்னுடைய பெற்றோர் என்னை நியூயார்க் நகரத்திற்கு அழைத்து சென்ற பயணம் என் வாழ்நாளில் என்னால் என்றென்னைக்கும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. பிராட்வே ஷோக்களை பார்ப்பது, எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் இருந்து கீழே பார்க்கும் காட்சி என நான் பட்டியலிட்டு வைத்திருந்த பக்கெட் லிஸ்ட்களில் பலவற்றை டிக் அடித்தேன். ஆனால் அந்த பயணத்தில் நான் முற்றிலும் எதிர்பாராமல் நடந்த ஒரு நிகழ்வு தான் இன்று மிக அசாத்தியமான ஒன்றாக என்னுடைய நினைவுகளில் ...