எழுத்தாளரை துரத்துதல் - சிபி

இன்று மாலை ஆறு மணியில் இருந்து ஒருவரை துரத்திக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் அவரை சென்றடையும் சில கணங்கள் முன் கிளம்பி வேறு இடத்திற்கு சென்று விடுகிறார். ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டே இருக்கிறார். நாங்களும் அவர் செல்லும் இடங்களை எல்லாம் பின்தொடர்ந்து கொண்டே செல்கிறோம். இவ்வளவு தூரம் ஒருவரை துரத்துவதற்குக் காரணம் அவருக்கு ஒரு வாழ்த்து சொல்வதே. மாலை நாலரை மணிக்கு நான் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்து திறன் பேசியை எடுத்துப் பார்த்தால் கிருஷ்ணன் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்." 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. ஆறு மணிக்கு கிளம்பி அவரை பார்க்கச் செல்கிறோம் நீங்கள் விரும்பினால் இணைந்து கொள்ளலாம்." என்பதே அந்த செய்தி. இனி எனக்கு சிறுவலூரில் இருந்து பெருந்துறைக்கு 5 மணிக்கு மேல் தான் பேருந்து. நிச்சயமாக ஆறு மணிக்கு ஈரோடு செல்ல இயலாது. ஆகையால் நான் வரத் தாமதமாகிவிடும் நீங்கள் சென்று வாருங்கள் என்று அவரிடம் சொல்லிவிட்டேன். நிழலின் தனிமை வாசித்து முடித்த போதே தேவிபாரதி அவர்களைப் பார்க்கச் செல்லலாம் என்று திட்டமிட்டிர...