ஜோதியின் வடிவம் - தமிழ்ச்செல்வி

"கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்" என்ற ஆளுமையின் பெயரை நான் அறக் கல்வி வகுப்பில் " சிவராஜ்" அண்ணா வகுப்பெடுக்கும் போது அறிந்து கொண்டேன். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் என்பவர் சிறுவயதிலிருந்தே காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பின்னர் வினோபா பாவேவுடன் இணைந்து பூமிதான இயக்கத்தில் தலித் மக்களுக்கு நிலங்களை பெற்றுத் தந்துள்ளார். மார்ட்டின் லூதர் கிங், காமராஜர் போன்றோரின் நட்பு இவருக்கு உண்டு.சிவராஜ் அண்ணா கட்டாயம் ஒரு நாள் நாம் அனைவரும் பாட்டியை பார்க்கச் செல்லலாம் என்று கூறினார்.அவ்வாறாக நாங்கள் 13 பேர் கொண்ட குழுவாக கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களை பார்க்கச் சென்றோம். நாங்கள் அனைவரும் காந்திகிராமத்தை அடைந்தோம். பின்னர் சிவராஜ் அண்ணாவும், மஞ்சரி அக்காவும் எங்களுடன் இணைந்து கொண்டனர். சிறிது தொலைவை கடந்த பின்னர் ஊழியர் அகத்தை அடைய முடியும் என்று ஸ்டாலின் அண்ணாவும் முத்து அண்ணாவும் கூறினார்கள். நாங்கள் நடக்கத் துவங்கினோம். திடீரென இரயில் ஒன்று வேகமாக அந்த பாதையின் வழிச் சென்றது. அந்த இடத்தில் தான் காந்தியின் நினைவாக ஓர் நினைவிடம் கட்டப்பட்டிருந்தது. அண்ணல் காந்தியடிகள்...