மும்மாநிலப் பயணம் - 3
.jpg)
ஜனவரி பன்னிரண்டு அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தயாராகி ஐந்து மணிப் பேருந்தை பிடிக்க கிளம்பினோம். நேற்று அந்த ஆட்டோக்காரரும் பாட்டியும் பேருந்து வராது என்று சொல்லியிருந்ததால் ஒவ்வொரு நிமிட தாமதமும் வருமா வராதா என்ற சந்தேகம் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஐந்து மணிக்கே ஜம்மளமடுகு இயங்கத் தொடங்கிவிட்டது. ஆட்டோக்களும் கார்களும் குறுக்கையும் மறுக்கையும் திரிந்த வண்ணம் இருந்தது. டீக்கடைகளில் கூட்டம். ஒவ்வொருவரிடமும் இப்போது பேருந்து வருமா என்று கேட்டுக்கொண்டே இருந்தோம். வாராது என்றே அனைவரும் பதிலளித்தனர். இரண்டு மூன்று பேருந்துகள் வந்து நின்று சென்றது. இது கந்திக்கொட்டா போகுமா இது கந்திக்கொட்டா போகுமா என்று கைநீட்டி கேட்கும் போதெல்லாம் போகாது என்ற ஒற்றை பதிலே வந்தது. ஒருகட்டத்தில் சூரியோதயம் பார்க்க முடியாமல் போய் விடுமோ என்று பயந்தோம். ஆட்டோவில் சென்றுவிடலாம் என்று தீர்மானித்தோம். "டேய் சங்கரு நேத்து ஒரு ஆட்டோக்காரர் நம்பர் வாங்குனீல அவர கூப்ட்டு பாக்கலாமா" என்று அவனிடம் கேட்டுக்கொண்டே காபியை குடித்துவிட்டு குவளையை வைக்க திரும்பும் போது அவர் டீ வாங்கிக் கொண்டு பின்னால் நின்றிருந்தார...