இடுகைகள்

மும்மாநிலப் பயணம் - 1

படம்
  நாங்கள் ஒருமுறை பிள்ளை திண்ணிக்கரடு சென்றிருந்த போது பாரத் தர்ஷன் குறித்து கிருஷ்ணன் அவர்கள் எங்களிடம் கூறினார். அப்போது அங்கு இருந்த இருபது பேருக்கும் அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது. பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் கொண்ட இந்தியப் பயணம் அது. நாங்கள் அது குறித்து தேடிப் பார்த்த போது அது நாங்கள் எதிர்பார்த்த இடங்களையும் எதிர்பார்த்த தொகையையும் உள்ளடக்கியதாக இல்லை. அப்போது தான் கிருஷ்ணன் அவர்கள் மீண்டும் ஒரு யோசனை வழங்கினார். நீங்கள் செல்ல விரும்பும் இடங்கள், செல்லும் தேதி, அதற்கான தொகை என எல்லாவற்றையும் நீங்களே திட்டமிட்டு ஒருங்கிணைத்து சென்று வாருங்கள் என்றார். அந்த பயணத்திற்கு அடிப்படையான ஒரு வரைபடத்தையும் அவரே வழங்கினார். நாங்கள் செயல்படத் தொடங்கினோம். ஜனவரியில் செல்ல வேண்டும் என்று அக்டோபரில் இருந்து திட்டமிடத் தொடங்கினோம். பதினெட்டு பேராக தொடங்கிய எங்கள் குழு சுருங்கி நான்கு நபர்களாக இப்போது இந்தப் பயணத்தை தொடங்கி உள்ளோம். ஈரோட்டில் தொடங்கும் எங்கள் பயணம் சென்னை வழியாக ஜம்மளமடுகுவிற்கு சென்று அங்கிருந்து கந்திக்கொட்டா, பிளம் குகைகளைப் பார்த்து விட்டு பின் யாகண்டி கோவில் மற்றும் ...

இனிய தொடக்கம் - சிபி

படம்
  யாரென்றே தெரியாத ஒருவர் நம் அருகில் வந்து அமர்வதும் நம்மிடையே பேசுவதும் புதிய அனுபவத்தை அளிப்பதும் அவ்வளவு அரிதானது அல்ல. இருப்பினும் இன்று நான் சந்தித்த ஒருவரைப் பற்றி எழுதிவிட வேண்டும் என்று தோன்றிக்கொண்டே உள்ளது. நாங்கள் ஒரு இந்தியப் பயணம் செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையம் சென்று கொண்டிருந்தோம். ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு செல்ல உள்ளோம். பெருந்துறை சென்று கொண்டு இருக்கும் போது சீனாபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் ஓடிவந்து என்னருகில் அமர்ந்தார். நான் அவரை பெரிதாக பொருட்படுத்தாத வண்ணம் வெளியே வெறித்துக் கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. எடுத்து 'ஹலோ' என்றவர் என்னிடம் அளித்தார். "தம்பி இதென்னமோ காதே கேக்க மாட்டீது என்னனு பாரு" என்றார். பழைய பட்டன் ஃபோன். இது போன்ற கோளாறுகளும், அழைப்பு எண்ணை போட்டுத்தரச் சொல்லியும், "தம்பி ஒரு போன் போட்டு குடே" என்றும் ஏராளமான நபர்கள் என்னிடம் கேட்டுள்ளனர். ஏதோ ஒரு சிறு தயக்கத்துடன் அதை செய்து கொடுப்பேன். இம்முறையும் அவ்வாறே வாங்கி லவுட் ஸ்பீக்கரில் போட்டுக் கொடுத்த...

எழுத்தாளரை துரத்துதல் - சிபி

படம்
இன்று மாலை ஆறு மணியில் இருந்து ஒருவரை துரத்திக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் அவரை சென்றடையும் சில கணங்கள் முன் கிளம்பி வேறு இடத்திற்கு சென்று விடுகிறார். ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டே இருக்கிறார். நாங்களும் அவர் செல்லும் இடங்களை எல்லாம் பின்தொடர்ந்து கொண்டே செல்கிறோம். இவ்வளவு தூரம் ஒருவரை துரத்துவதற்குக் காரணம் அவருக்கு ஒரு வாழ்த்து சொல்வதே. மாலை நாலரை மணிக்கு நான் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு  வந்து திறன் பேசியை எடுத்துப் பார்த்தால் கிருஷ்ணன் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்." 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. ஆறு மணிக்கு கிளம்பி அவரை பார்க்கச் செல்கிறோம் நீங்கள் விரும்பினால் இணைந்து கொள்ளலாம்." என்பதே அந்த செய்தி. இனி எனக்கு சிறுவலூரில் இருந்து பெருந்துறைக்கு 5 மணிக்கு மேல் தான் பேருந்து. நிச்சயமாக ஆறு மணிக்கு ஈரோடு செல்ல இயலாது. ஆகையால் நான் வரத் தாமதமாகிவிடும் நீங்கள் சென்று வாருங்கள் என்று அவரிடம் சொல்லிவிட்டேன். நிழலின் தனிமை வாசித்து முடித்த போதே தேவிபாரதி அவர்களைப் பார்க்கச் செல்லலாம் என்று திட்டமிட்டிர...

நாளும் சிறந்த நாள்- சிபி

படம்
இன்று நாங்கள் ஒரு மலையாளிகளின் கிராமத்திற்கு சென்று ஏராளமான மலையாளிகளைக் கண்டோம். ஆனால் அந்த கிராமம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அவர்கள் யாருக்கும் மலையாளம் தெரியாது. அவர்கள் அனைவரும் தமிழர்கள் தான். ஆனால் நான் எந்தப்பொய்யும் சொல்லவில்லை அவர்கள் மலையாளிகள் தான். குருவரெட்டியூர் அருகே கண்ணாம்மூச்சி என்ற ஊரில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் பாலமலை என்ற மலையில் ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு அடிப்படை மருந்துகளை உள்ளடக்கிய முதலுதவிப் பெட்டிகள் வழங்குவதற்காகத்தான் நாங்கள் இன்று சென்றோம். ஆனால் அந்தப் பயணமே மனதில் என்றும் மறையப்போகாத இடத்தை பிடித்துவிட்டது. கண்ணாம்மூச்சியில் சாப்பிட்டுவிட்டு க்ரூஷர் ஜீப்பில் நாங்கள் மொத்தம் 12 பேர் பயணத்தை தொடங்கினோம். அந்த வண்டி தான் அந்த ஊருக்கு ஒரே போக்குவரத்து. பொதுமக்களுக்கு 60 ரூபாய் பயணத்தொகை. நாங்கள் அந்த வண்டியை மொத்தமாக வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றோம். ஒரு பெரியவர் வழியை மறித்து வண்டியின் மேலே ஏறிக்கொண்டார். வண்டி குண்டும் குழியுமான மண்பாதையில் செல்லத் தொடங்கியது. அனு "ரோடு எப்ப சார் வரும்" என்று கேட்டாள். "ரோட்ல தா மா...

ஜோதியின் வடிவம் - தமிழ்ச்செல்வி

படம்
"கிருஷ்ணம்மாள்  ஜெகந்நாதன்" என்ற ஆளுமையின் பெயரை நான் அறக் கல்வி வகுப்பில் " சிவராஜ்" அண்ணா வகுப்பெடுக்கும் போது அறிந்து கொண்டேன். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் என்பவர் சிறுவயதிலிருந்தே காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பின்னர் வினோபா  பாவேவுடன் இணைந்து பூமிதான இயக்கத்தில் தலித் மக்களுக்கு நிலங்களை பெற்றுத் தந்துள்ளார்.  மார்ட்டின் லூதர் கிங், காமராஜர் போன்றோரின் நட்பு இவருக்கு உண்டு.சிவராஜ் அண்ணா கட்டாயம் ஒரு நாள் நாம் அனைவரும் பாட்டியை பார்க்கச் செல்லலாம் என்று கூறினார்.அவ்வாறாக நாங்கள் 13 பேர் கொண்ட குழுவாக கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களை பார்க்கச் சென்றோம். நாங்கள் அனைவரும் காந்திகிராமத்தை அடைந்தோம். பின்னர் சிவராஜ் அண்ணாவும், மஞ்சரி அக்காவும் எங்களுடன் இணைந்து கொண்டனர். சிறிது தொலைவை கடந்த பின்னர் ஊழியர் அகத்தை அடைய முடியும் என்று ஸ்டாலின் அண்ணாவும் முத்து அண்ணாவும் கூறினார்கள். நாங்கள்  நடக்கத் துவங்கினோம்.  திடீரென இரயில் ஒன்று வேகமாக அந்த பாதையின் வழிச் சென்றது. அந்த இடத்தில் தான் காந்தியின் நினைவாக ஓர் நினைவிடம் கட்டப்பட்டிருந்தது. அண்ணல் காந்தியடிகள்...

மூன்றாவது மாடி - சிபி

படம்
முதல் மாடிக்கும் மூன்றாவது மாடிக்கும் இந்த உலகின் புறச்சூழலில் எத்தனை வித்தியாசங்கள். நான் தேர்வெழுதும் சமயங்களில் பதில் தெரியாமல் கொட்டை முழி முழிக்கும் போதும், நேரத்தைப் போக்க நாதியற்று இருக்கும் போதும் கை கொடுப்பது ஜன்னல் வழிக் கொஞ்சம் தெரியும் இந்த பரந்த பரப்பே. அனைத்துத் தளங்களிலும் பரிட்சை எழுத வேண்டியிருக்கும். ஒவ்வொரு தேர்வும் ஒவ்வொரு அறையில். தெரியாத கேள்விக்கு தெரியாத பதிலை பக்கம் பக்கமாக எழுதுவதைத் தவிர சலிப்பான வேலை வேறொன்றுமில்லை. சில சமயங்களில் தேர்வே எழுத வேண்டாம் சும்மாவே இருந்துவிடுவோம், இல்லை தூங்கி விடுவோம் என்னும் அளவிற்கு சலிப்பு நம்மை போட்டு அழுத்தும். அப்போதெல்லாம் விரிந்த தோள் கொண்ட இந்த இயற்கையின் மீது கொஞ்ச நேரம் சாய்ந்திருந்துவிட்டு தான் எழுதத் தொடங்குவேன். தரை தளத்தில் இருந்தோ முதல் மாடியில் இருந்தோ பார்க்கும் இந்த உலகிற்கும் மூன்றாவது மாடியில் இருந்து பார்க்கும் இந்த உலகிற்கும் உள்ள வித்தியாசங்கள் வியப்பில் ஆழ்த்தியன.  மிக உயர்ந்த மரத்தின் தண்டில் மெல்ல நகரும் கம்பிளிப்பூச்சிகளின் தொகை எத்தனை அழகு. வெல்வெட் துணி ஒன்று மிகப்பெரிய மரத்தை முழுவதும் மூடி வி...

வரலாற்றை சந்தித்தல் - மு.சௌமியா ஸ்ரீ

படம்
நான் சிறுவயதிலிருந்து என்னை சுற்றி இருக்கும்  பெண்களின் வாழ்க்கையைப் பார்த்து ஒரு பெண், வாழ்வில் தான் நினைத்ததை செய்யவும் விரும்பியதைப் போல் வாழவும் திருமணமும் குடும்பமும் ஒரு தடையாக தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் புத்தகத்தில் மேரி கோம் அவர்களின் சுயசரிதத்தைப் படித்தேன். அப்போது "மேரி கோம்" அவர்கள் உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் 5 முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்று தெரிந்துக் கொண்டேன். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு திருமணம் ஆகிய பிறகும் குத்துச்சண்டையில் பங்கேற்றார் எனவும் குழந்தை பெற்ற பிறகும் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கியுள்ளார் என்பது என் எண்ணத்தையே மாற்ற ஆரம்பித்தது.  பிறகு, ஒருநாள் சிவராஜ் அண்ணா வகுப்பில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் என்ற பாட்டியைப் பற்றிக் கூறினார். அப்போது, பாட்டி பத்மபூஷன் விருது பெற்றவர் என்றும் கூறினார். சிவராஜ் அண்ணா ஒருநாள் பாட்டியைப்  பார்த்துவிட்டு திரும்பும் போது பாட்டி அந்த பத்மபூஷன் விருதை நோட்டின் அட்டையின் நடுவே இருந்து எடுத்து சிவராஜ் அண்ணாவிடம் "இதை நீ டோல்கேட்டில் காண்ப...